வரலாற்றில் இன்று மே 20.

Unknown
0

மே 20:


கிரிகோரியன் ஆண்டின் 140 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 141 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன.


?நிகழ்வுகள்


526 - சிரியாவில் நிகழ்ந்த
நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின்
கோழிக்கோடு நகரை அடைந்தார்.

1570 - உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas)
ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.

1605 - ரோமைச் சேர்ந்த
கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள்
கோவா வந்து சேர்ந்தார்.

1631 - முப்பதாண்டுப் போர் : ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை
புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர்.

1813 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து
ரஷ்யா , மற்றும்
புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.

1869 - யாழ்ப்பாணத்தில்
தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.

1873 - லேவி ஸ்ட்ராவுஸ்,
ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத்
தட்டாணியுடனான நீல
ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.

1882 - ஜெர்மனி ,
ஆஸ்திரியா-ஹங்கேரி , மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.

1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது
உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

1902 - ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து
கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.

1940 - முதல் தொகுதி சிறைக்கைதிகள்
அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.

1949 - குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.

1965 - எகிப்தில் கெய்ரோ நகரில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில்
கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.

1995 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில்
கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.

1999 - புளூடூத் (Bluetooth ) வெளியிடப்பட்டது.

2002 - கிழக்குத் தீமோரின் விடுதலையை
போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால
ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.

?பிறப்புகள்


1743 – டூசான் லூவர்சூர், எயிட்டி புரட்சித் தலைவர் (இ. 1803 )

1799 – பல்சாக் , பிரான்சிய எழுத்தாளர் (இ. 1850 )

1825 – ஜார்ஜ் பிலிப்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1865 )

1845 – அயோத்தி தாசர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1914 )

1851 – யமஹா, டொரகுசு, சப்பானியத் தொழிலதிபர் (இ. 1916 )

1860 – எடுவர்டு பூக்னர் ,
நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1917)

1894 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது தலைவர் (இ. 1994 )

1908 – ஜேம்ஸ் ஸ்டுவர்ட் , அமெரிக்க நடிகர் (இ. 1997 )

1923 – எம். டி. இராமநாதன், இந்திய கருநாடக இசைப்பாடகர் (இ. 1984 )

1935 – ஒசே முகிக்கா , உருகுவாயின் 40வது அரசுத்தலைவர்

1938 – காரை சுந்தரம்பிள்ளை , ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2005 )

1939 – பாலு மகேந்திரா, இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (இ. 2014)

1950 – சாலா நாத் கனால், நேபாள அரசியல்வாதி, பிரதமர்

1953 – ராம்லி இப்ராஹிம் , மலேசிய பரத நாட்டியக் கலைஞர்

1957 – யோஷிஹிகோ நோடா, சப்பானின் 62வது பிரதமர்


?இறப்புகள்


1506 – கொலம்பசு ,
அமெரிக்காவைக் கண்டுபிடித்த இத்தாலிய கடல் பயணி (பி. 1451 )

1766 – மல்கர் ராவ் ஓல்கர் , மராட்டியப் பேரரசர் (பி. 1693

1957 – த. பிரகாசம் , சென்னை மாகாண முதல்வர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1872 )

1959 – சா. தருமாம்பாள் , தமிழக அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் (பி.
1890 )

1978 – பி. சா. சுப்பிரமணிய சாத்திரி , தமிழக சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர் (பி. 1890)

2004 – எம். ஏ. குலசீலநாதன் , ஈழத்து கருநாடக, மெல்லிசைப் பாடகர் (பி.
1940 )

2005 – செம்பியன் செல்வன் , ஈழத்து எழுத்தாளர் (பி. 1943 )

2008 – பால்ராஜ் ,
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965 )


?சிறப்பு நாள்


நினைவு நாள் (கம்போடியா )

விடுதலை நாள் (கியூபா , 1902)

விடுதலை நாள் (கிழக்குத் திமோர் , 2002)
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top