பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் தேரோட்டம்.

Unknown
0

பேராவூரணி நகர் முடப்புளிக்காடு ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார்  கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலும் ஒன்றும். தீராத வினை தீர்க்கும் திரு நீலகண்ட விநாயகர் என பெயர் பெற்ற இக்கோயிலின் சித்ரா பவுர்ணமி 12 நாள் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 01ம் தேதி நடந்தது. திருவிழா காலங்களில் உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுப்பு, பால்குடம், தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top