பேராவூரணி வட்டாரத்தில் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்திட வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநர்(பொறுப்பு) எஸ்.இராணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: பேராவூரணி வட்டாரத்தில் ஆண்டுதோறும் 250 எக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் இவ்வட்டாரத்தில் இதுவரை 120 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தற்போது நிலவி வரும் கடும் வறட்சியினால் அனைத்து பயிர் நிலைகளிலும் பாதிப்பு மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், குறுவை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரிபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். குறுவை சாகுபடி காலத்திற்குள் சாகுபடி செய்துள்ளஅனைத்து விவசாயிகளும் ஜூலை 31- க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இயங்கிவரும் தகவல் மையத்தினை அணுகவும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : தீக்கதிர்