பேராவூரணி அடுத்த மணக்காடு பகுதியில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.
ஜூலை 22, 2017
0
பேராவூரணி அருகே மணக்காடு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகக் கூறி, கடையைதிறக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கோட்டாட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.பேராவூரணி வட்டம் மணக்காடு அ.ஆறுமுகம், வீரக்குடி ப.ஆசைத்தம்பி ஆகியோர் பொதுமக்கள் சார்பில் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பேராவூரணி வட்டம் மணக்காடு பகுதியில் செந்தாமரை செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை தொடங்கப்போவதாக தெரிகிறது.மணக்காடு ஊராட்சி மிகவும் பின்தங் கிய பகுதி. ஆதிதிராவிடர் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும், பள்ளி மாணவ,மாணவியர், மருத்துவமனை செல்லும் பெண்கள், வெளியூர் சென்று வேலைசெய்து வருவோர் நடமாடும் பகுதியாகவும் உள்ளது.
மாலை, இரவு நேரங்களில் பேருந்து வசதி போதிய அளவில் இல்லாத பகுதியாக இருப்பதால், ரெட்டவயல் - மணக் காடு சாலையில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் தனியே நடந்து வரும்போதுஅசம்பாவிதம் நடைபெறும் வாய்ப்புள் ளது. எனவே இப்பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட இடத்தில் மதுக்கடை அமைக்க அனுமதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரெட்டவயல், மணக் காடு, கொளக்குடி, அமரசிம்மேந்திரபுரம் கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ‘டாஸ்மாக் மதுபான எதிர்ப்பு கூட்டமைப்பு’ ஏற்படுத்தி “பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை அமைத்தால் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளனர்.
நன்றி;தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க