பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (58).விசைப்படகு மீனவர். தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.இவர் கடந்த 19 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, வியாழக்கிழமை காலைவீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது கண்டு, அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது, மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 33 பவுன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.42 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதுதெரியவந்தது.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய காவலர்கள் இல்லைபேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடந்து வரும் நிலையில் காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லாததால் திருட்டுக்களை கண்டுபிடிப்பதிலும், பொருட்களை மீட்பதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பேராவூரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் பொருட்கள் திருட்டு.
ஆகஸ்ட் 26, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க