செப்டம்பர் 2 (September 2) கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 44 – எகிப்தின் பாரோ ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை அரசனாக்கினாள்.
கிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.
1642 – இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது.
1666 – இலண்டன் பெரும் தீ: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.
1752 – கிரெகொரியின் நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1792 – பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.
1806 – சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட நிலசரிவில் 457 பேர் கொல்லப்பட்டனர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.
1870 – பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.
1885 – வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.
1898 – பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.
1935 – புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான முற்றுகையை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாசி செருமனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் “மிசூரி” என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.
1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.
1951 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
1958 – அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1965 – பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.
1967 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது.
1970 – சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.
1990 – மால்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
1992 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.
1996 – பிலிப்பீன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1998 – நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் கொல்லப்பட்டனர்.
2006 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
பிறப்புக்கள்
1838 – லில்லியுகலானி, அவாய் ஆட்சியாளர் (இ. 1917)
1866 – சாள்ஸ் வின்சன்ட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டாளர் (இ. 1943)
1913 – இசுரேல் கெல்ஃபாண்ட், உருசிய கணிதவியலர் (இ. 2009)
1952 – ஜிம்மி கான்னர்ஸ், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
1964 – கேயானு ரீவ்ஸ், கனேடிய நடிகர்
1966 – சல்மா ஹாயெக், மெக்சிக்க-அமெரிக்க நடிகை
1969 – ஸ்டீபன் பியல், சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்
1973 – இந்திக டி சேரம், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
1988 – இஷாந்த் ஷர்மா, இந்துயத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1969 – ஹோ சி மின், வியட்நாம் தலைவர் (பி. 1890)
1973 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1892)
1996 – பேடி கிளிஃப்ட், சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் (பி. 1953)
2009 – ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைஇச்சர் (பி. 1949)
சிறப்பு நாள்
வியட்நாம் – குடியரசு நாள் (1945)
ஜேர்மனி – வெற்றி நாள் (1870, பிரான்சுடன் இடம்பெற்ற போரில்)
திரான்ஸ்னிஸ்திரியா – விடுதலை நாள் (1990, எந்த நாட்டினாலும் இது அங்கீகரிக்கப்ப்படவில்லை)