பேராவூரணி வர்த்தக சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம், வர்த்தக சங்க அலுவலகக் கட்டிடத்தில், வர்த்தக சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.இக்கூட்டத்தில், கடந்த செப்டம்பர் 14 வியாழக்கிழமையன்று பேராவூரணி கடைவீதியில் தனது அடியாட்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் வெங்கடேஸ்வரர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் செப்டம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமையன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வழக்கறிஞர் வெங்கடேஸ்வரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பார் கவுன்சில் நிர்வாகத்தை அணுகுவது, திருவிழா மற்றும் கூட்ட நெரிசல் காலங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்து தர வேண்டும். காவல்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.