பேராவூரணி பேரூராட்சி பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி.
செப்டம்பர் 16, 2017
0
பேராவூரணி பேருராட்சி பகுதிகளான கூப்புளிக்காடு, ஆதனூர் மேற்கு , கிழக்கு கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் ( காணை) தடுப்பூசி போடும் முகாம் ஆதனூர் தேரடி திடலில் நடைபெற்றது.முகாமிற்கு பேராவூரணி கால்நடை மருத்துவர் இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.முகாமை தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பி.மாசிலாமணி தொடக்கி வைத்தார்.கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பட்டுக்கோட்டை டாக்டர் எஸ்.செல்வராஜ், தஞ்சை துணை இயக்குனர் பாக்டர் ஆர்.ராஜசேகரன், ஆகியோர் முன்னிலையில் முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் அசெல்வராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அமிர்தவள்ளி ஆகியோர் பங்கேற்று மருத்துவனை சார்பாக சுமார் 600 பசு மற்றும் காளை மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் எம்.மால்போஸ், எஸ்.அருள்சுபாஷ்,பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர் நிறைவில் ஆண்ட்ரூஸ்நெப்போலியன் நன்றி கூறினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க