பேராவூரணி பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆசிரியை வீரம்மாள் தலைமை வகித்தார். ஆசிரியை காந்திமதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஆசிரியை ரஞ்சிதா,மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். கேரளாவில் ஆவணி மாதம் வளர்பிறை நாளில் திருவோண நட்சத்திரத்தில் திருவோணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஓணம் பண்டியை முன்னிட்டு பள்ளியில் மாணவ மாணவிகள் கோலம் போடும் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆசிரியர் இராமநாதன் செய்திருந்தார். நிறைவில் ஆசிரியை குளோரி நன்றி கூறினார்.
பேராவூரணி அருகே அரசு பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.
செப்டம்பர் 09, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க