ஆனந்தவள்ளி வாய்க்கால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லுமா.

Unknown
0
பேராவூரணி நகரின் மையத்தில் ஓடி நகருக்குஅழகு சேர்த்ததோடு மட்டுமின்றி, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வாய்க்காலாக இருந்த ஆனந்தவள்ளி வாய்க்கால் பொலிவிழந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கரைகள் சேதமடைந்தும், படிக்கட்டுகள் உடைந்தும் தண்ணீர் செல்லும் ஷட்டர்கள், துருசுகள் மண்மேடிட்டு மூடிய நிலையில் உள்ளது.மேலும் வாய்க்கால்களின் நடுவே எருக்கு மற்றும் புதர்கள் மண்டிப்போய் பாழடைந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த பாசன வாய்க்கால்குப்பைகளை கொட்டும் இடமாகவும்மாறிவிட்டது. குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர் குழாய் மூலம்ஆனந்தவல்லி வாய்க்காலில் விடப் படுவதால், சாக்கடை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி செய்யும் தலமாகவும் மாறிவிட்டது.

இந்த பாசன வாய்க்கால் மூலம் பழைய நகரம், மாவடுகுறிச்சி, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன.அக்டோபர் 2 ஆம் தேதி முதலமைச்சரின் அறிவிப்பின் பேரில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது கல்லணைக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வந்து சேரும் என கூறப்படுகிறது. கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரும்பாலும் கடைமடைப் பகுதிகளுக்கு வந்து சேருவதில்லை. மேலும் பருவமழை பொய்த்துப் போனதால் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்டகடைமடைப் பகுதியில் கடந்த 5 ஆண்டு காலமாகவே விவசாயப்பணிகள் சரிவர நடைபெறாமல் விவசாயிகள், தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாசன வாய்க்கால் கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டிக்கிடப்பதால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருமா என கேள்வி எழுந்துள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top