அலையாத்திக்காட்டில் சீசன் துவக்கம் அரியவகை வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியது.
அக்டோபர் 25, 2017
0
அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் சீசன் துவங்கியதால் அரியவகை வெளிநாட்டு பறவைகள் வர துவங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையையொட்டி அலையாத்திக்காடு உள்ளது. இந்த காட்டில் அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, தீப்பரத்தை மற்றும் சுரப்புன்னை போன்ற தாவரங்கள் வளர்ந்துள்ளது.
இவற்றில் அலையாத்தி மரம் முதன்மையான தாவரமாக காணப்பபடுகிறது. அலையாத்திக்காட்டில் நரி, முயல், காட்டுப்பன்றி அதிகளவில் உள்ளது. அலையாத்திக்காட்டில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத சீசனையொட்டி ஆஸ்திேரலியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செங்கால்நாரை, கூலக்கிடா, மீன் கொத்தி, ஊசிவால் வாத்து பவளகால் உள்ளான், மயில்கால் கோழி, வெண்கொக்கு என 50க்கும் மேற்பட்ட வகையான நீர்பறவைகள் வரும். தற்போது சீசன் துவங்கியுள்ளதால் அரியவகை பறவைகள் வர துவங்கியுள்ளது.
இதுகுறித்து பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர் சங்கர் கூறுகையில், அலையாத்திக்காட்டில் பறவைகளுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை அமைந்துள்ளது. கடற்கரையையொட்டி காடுகள் அமைந்துள்ளதால் மீன், இறால்களை கொத்தி திண்பதற்காக ஏற்றதாகவும் உள்ளது. இமயமலை அடிவாரத்திலிருந்து அலையாத்திக்காட்டுக்கு வெளிநாட்டு பறவைகள் வர துவங்கியுள்ளது என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க