பயிர் காப்பீடு இழப்பீடு கோரி மறியல் முடிவு.

Unknown
0


பேராவூரணி ஒன்றியம், சித்தாதிக்காடு கிராம விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை காலை (அக். 13) சித்தாதிக்காட்டில் சாலை மறியல் செய்ய கிராம மக்கள், விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்தது: இக்கிராமத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முற்றிலும் பயிர் பாதிப்படைந்த நிலையிலும் இழப்பீட்டு தொகை வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து கடந்த 4.09.2017 -ல் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் 13.09.2017-ல் சொர்ணக்காடு கிராமத்தில் நடைபெற்ற ஆட்சியரின் குறைதீர் முகாமில் நினைவூட்டல் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளின் வேதனையறியாத அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்தும் பயிர் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் மறியல் போராட்டம் செய்யப்போவதாகத் தெரிவித்தனர்.
நன்றி:தினமணி
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top