பேராவூரணியில் 5 மி.மீ மழை பதிவு காலை 8.30 மணி நிலவரம்.
நவம்பர் 28, 2017
0
பேராவூரணியில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த 3 நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திடீரென பலத்த காற்று வீசியது. பேராவூரணியில் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. லேசாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மழை நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (நவ.28) செவ்வாய்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி பேராவூரணியில் 5 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக லோவர் அணைகட்டில் 79.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 5.50 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ, மதுக்கூரில் 3.2 மி.மீ மழை பதிவாகியது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க