பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நவம்பர் 01, 2017
0
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர்புதுத்தெரு, மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பாய்மர படகு, பைபர் படகு, கட்டுமரங்கள் என சுமார் 2 ஆயிரம் நாட்டுபடகுகளும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 301 விசைப்படகுகளும் உள்ளன.
இதில் வாரத்தில் விசைப் படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்களும், மற்ற நாட்களில் நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.
கடலுக்கு செல்லவில்லை
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சேதுபாவாசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. மேலும், கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வழக்கம்போல் நேற்று கடலுக்கு செல்ல வேண்டிய 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதே போல வாக்கிடாக்கி வாங்குவதற்கு மீனவர்களை அரசு கட்டாயப்படுத்தி வருவதை கண்டித்தும், அதி நவீன இழுவலை படகு வாங்க அரசு கட்டாயப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் 2 ஆயிரம் விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றமாக உள்ளதால் நாட்டு படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் தங்களது படகுகளை பாதுகாப்பாக துறை முகங்களில் நிறுத்தியுள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க