திருமயம் தாலுகா, கடியாபட்டி ராவுத்தாம்பட்டி ஊரார்கள் இளைஞர்களால் நடத்தப்படும் 9ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்.
நவம்பர் 26, 2017
0
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கடியாபட்டி ராவுத்தாம்பட்டி ஊரார்கள் இளைஞர்களால் நடத்தப்படும் 9ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நேற்று நடைபெற்றது. இப்பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு என தனித்தனியாக நடைபெற்றது. இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசினை கடியாப்பட்டி செந்தில், இரண்டாம் பரிசினை கூம்பள்ளம் சசி மாடும், மூன்றாம் பரிசினை சிவகங்கை ஆகாஷ் ஸ்டுடியோவும், நான்காம் பரிசினை வெளமுத்து சூர்யா பவுன்ராசும் பெற்றுச் சென்றனர். சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசினை வெளமுத்து சூர்யா பவுன்ராசு, இரண்டாம் பரிசினை வெட்டிவயல் எஸ்.பி.சுந்தரேசன், மூன்றாம் பரிசினை பி.அழகாபுரி சர்க்கரை ராவுத்தர், நான்காம் பரிசினை மாவூர் ஏ.ஆர். ராமச்சந்திரனும் பெற்றுச் சென்றனர். இவ்விழாவில் 15 பெரிய மாட்டு வண்டிகளும், 80 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பான முறையில் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமயம், அரிமளம் காவல்துறையினர் செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் பந்தயத்தை கண்டு ரசித்தனர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க