பேராவூரணி விவசாயிகள் பயிர்காப்பீடு சிறப்பு முகாம்.
நவம்பர் 21, 2017
0
பேராவூரணி விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்குரிய வருவாய நில உடமை ஆவணங்களை பெற சிறப்பு முகாம் நாளை நடக்க உள்ளதாக ஆர்டிஓ கோவிந்தராசு உதவி வேளாண் அலுவலர் மதியரசன் தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு தேவையான வருவாய் நில உடமை ஆவணங்கள், விஏஒ சான்றிதழ்கள் அனைத்தும் 21ம் தேதி (20.11.2017) நடைபெறும் சிறப்பு முகாமில் குறிச்சி மற்றும் திருச்சிற்றம்பலம் சரகத்தை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில், பேராவூரணி, ஆவணம், குருவிக்கரம்பை, பெருமகளூர் சரகத்தை சேர்ந்தவர்கள் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்திலும் பெற்று வரும் 30ம் தேதிக்குள் (30.11.2017) ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 402 வீதம் வங்கி அல்லது வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிள்லோ செலுத்தி பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க