பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் இடையே ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்.

Unknown
0


பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் தடத்தில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.காரைக்குடி - திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு மீட்டர் கேஜ் பாதையை ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் இடையிலுள்ள அகல ரயில் பாதையில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முதல் மாளியக்காடு ஊராட்சி பகுதி வரையிலான ரயில் பாதையில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு, அதன் மீது ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தண்டவாளங்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாளியக்காட்டிலிருந்து அதிரை வரை தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஏராளமான ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டு வரப்பட்டு, ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு ரயில் பாதையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதிராம்பட்டினம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் நிறைவடையும் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top