![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAWRB_OjLft9cWa8KoNuBXQIEebbALRyMQrKYwJF5Pr7RfRoD3PdwixToQGQAXY8_cFPn8U-YIzGdQVZeRBcgHpoOXNxoDKUVKAk3EoIkqzCixAo8u-oeDbHGtQ2DcXMlB_bucbe6l07I/s1600-rw/PVITOWN-2017-11-14-09-40-58-769.png)
பேராவூரணி பேரூராட்சியில் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள், சாக்கடை கழிவு நீர் அகற்றப்படாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள 18 வார்டுகளிலும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டபொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக் கும் மேலாக பேராவூரணி தெருக்களில்குப்பைகள் சரிவர அள்ளப்படாமலும், சாக்கடை கழிவுநீர் அகற்றப்படாமலும், தெருக்கள் முழுவதும் சுகாதாரச் சீர் கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக நீலகண்டப் பிள்ளையார் கோயில் எதிரில் ரயில்வே சாலையில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. அதேபோல் 1 ஆவது வார்டு ஆஸ்பத்திரி ரோடு சாலை, தேவதாஸ் ரோடு ஆகியஇடங்களில் குப்பைகள் அகற்றப்படவில்லை.மேலும் நகரில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், தொட்டிகளில் நிரம்பும் சாக்கடை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
பேரூராட்சியில் கழிவு நீர் அகற்றும்வாகனம், குப்பைகளை ஏற்றிச் செல் லும் வாகனம் போதிய அளவில் இல்லையென கூறப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், சுகாதாரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகரின் 18 வார்டுகளும் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கியுள்ளது.எனவே போதிய அளவில் பணியாளர்கள், வாகனங்களை பயன்படுத்தி நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றவும், தேவையான இடங்களில் குப்பைத்தொட்டிகளை வைத்து சுகாதாரப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
நன்றி:தீக்கதிர்