தஞ்சை மாவட்டத்தில் தொடர்மழை: நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை,
நவம்பர் 06, 2017
0
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கும்பகோணம், பாபநாசம், திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், மஞ்சளாறு, குருங்குளம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த மழையினால் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
விவசாயிகள் கவலை
இதனால் மழைநீர் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி நடவுப்பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மழைபெய்து வருவதால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு ஏதுவாக காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாயில் 501 கன அடி மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் ஆறு, வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழைஅளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அதிராம்பட்டினம் 25.2, கும்பகோணம் 41, பாபநாசம் 32.4, தஞ்சாவூர் 23, திருவையாறு 29, திருக்காட்டுப்பள்ளி 19.6, வல்லம் 32, கல்லணை 6.6, அய்யம்பேட்டை 31, திருவிடைமருதூர் 51.6, மஞ்சளாறு 70.6, நெய்வாசல் தென்பாதி 57, பூதலூர் 14.2, வெட்டிக்காடு 15, ஈச்சன்விடுதி 14, ஒரத்தநாடு 18.6, மதுக்கூர் 45.6, பட்டுக்கோட்டை 20.6, பேராவூரணி 16, அணைக்கரை 47.8, குருங்குளம் 13.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க