பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்வி மையத்தில் கருத்தரங்கம்.
நவம்பர் 12, 2017
0
பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்வி மையத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. வான் சிறப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திருக்குறள் பேரவையின் தலைவர் மு.தங்கவேலனார் தலைமை வகித்தார் பேரவைச் செயலாளர் பேரா. கி.புவனேசுவரி வரவேற்றார். கருத்தாளர்களாக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தா.கலைச்செல்வன் ஆகியோர் வான் சிறப்பு அதிகாரத்தின் நோக்கங்களை வலியுறுத்தி பேசினார்கள். பேரவையின் நிர்வாகக்குழு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உலக உயிர்களின் தோற்றத்திற்கும், வாழ்வுக்கும் அடிப்படையாக அமைவது வான் மழை. மழை இல்லாமல் போனால் உயிர்கள் பசி பட்டினியால் வாடும், உலக ஒழுங்கும், மனிதர்களின் ஒழுக்கமும் கெட்டுப்போகும் என்று மழையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பாயிர வரிசையில் இரண்டாவது அதிகாரமாக திருக்குறளில் போற்றப்படுவது வான் மழையே அறிவியல் அடிப்படையிலும் மழை இன்றேல் உலக உயிர்களின் வாழ்வியல் அற்றுப்போகும் என்றும் உயிர்களின் தொடர்பை அழியாமல் பாதுகாப்பதனாலேயே மழையை அமிழ்தம் என்கிறார் வள்ளுவர் என்றும் கருத்தரங்கில் கூறப்பட்டது. நிறைவாக பேரவைப் பொருளாளர் ஆயர் த.ஜேம்ஸ் நன்றி கூறினார்.
நன்றி : மெய்ச்சுடர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க