இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம்.
நவம்பர் 21, 2017
0
பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய அளவிலான இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ‘இயற்கை சீற்றங்கள் விழிப்புணர்வு முகாம்’ டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி தாளாளரும், தமிழ்நாடு மெட்ரிக்பள்ளிகள் சங்க மாநில துணைத்தலைவருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில், ‘பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ளுதல், ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுதல், முதலுதவி சிகிச்சை அளித்தல்’ குறித்து, முதலுதவி மீட்பு பணி மாநில பயிற்றுநர் துளசிதுரைமாணிக்கம், சிறப்பு பயிற்றுநர்கள் சுரேஷ், காந்தி லெனின்மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தலைமை அலுவலர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்தனர்.குமரப்பா பள்ளி அறங்காவலர் ராமு, திருக்குறள் பேரவை பாவலர் தங்கவேலனார், ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர்கள் கு.கமலராஜன், பி.துரைசிங்கம், அன்னமேரி, 315 பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க