டிசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1271 – குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
1505 – பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்.
1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1935 – இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
1941 – ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹொங்கொங் மீது படையெடுத்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் ஜப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
1961 – இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
1966 – சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
1973 – சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1987 – லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
1990 – ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1997 – எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது.
1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
2012 – தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000 வது கட்டுரை எழுதப்பட்டது.
பிறப்புக்கள்
1822 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் முன்னோடி (இ. 1879)
1856 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கில இயற்பியலாளர் (இ. 1940)
1863 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)
1878 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (இ. 1953)
1932 – நா. பார்த்தசாரதி, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)
1946 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)
1948 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
இறப்புகள்
1843 – தாமஸ் கிரஹாம், லினடொக் பிரபு, இந்தியாவுக்கான பிரித்தானிய வைசிராய் (பி. 1748)
சிறப்பு நாள்
சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம்
நைஜர் – குடியரசு தினம் (1958)