ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன்.

Unknown
0
ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ரெட்மி நோட் 5 ஜனவரி 2018-இல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது ரெட்மி நோட் 5 அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் சமீபத்திய ட்ரென்ட் செட்டிங் அம்சங்களில் ஒன்றான ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படும் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வித மெமரிக்களை கொண்டிருக்கும் என்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 5 எம்பி செல்ஃபி கேமராவும், டூயல் பிரைமரி கேமரா: 16 எம்பி + 5 எம்பி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 7.1.2 இயங்குதளம் மற்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.
சியோமி ரெட்மி நோட் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

* 5.99 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே
* 64-பிட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
* அட்ரினோ 508 கிராபிக்ஸ்
* யுஎஸ்பி டைப்-சி 3.1
* குவிக் சார்ஜ் 4.0, ப்ளூடூத் 5
* 16 + 5 எம்பி பிரைமரி கேமரா f/2.0 அப்ரேச்சர்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதன் விலை 200 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top