மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைவு. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 898 கன அடியிலிருந்து 840 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 77.76 அடி; நீர் இருப்பு 39.76 டி.எம்.சி. அணையிலிருந்து நொடிக்கு 9,000 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது.