சின்ன வெங்காயம் சாகுபடி.
டிசம்பர் 13, 2017
0
சின்ன வெங்காயம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். வைகாசிப் பட்டத்தில் சாகுபடி70-75 நாளில் அறுவடைக்கு வரும் புரட்டாசி, ஐப்பசியில் பயிர் செய்தால் 80-85 நாளில் அறுவடைக்கு வரும். ஆனால் வைகாசிப் பட்டத்தைவிட கூடுதல் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 700 கிலோ விதை வெங்காயம்தேவை தேர்வு செய்த 1 ஏக்கர் நிலத்தில் 3டன் எருகொட்டி 3சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, முக்கால் அடி அகலம், அரையடி உயரத்தில் பார் அமைக்க வேண்டும். பார்களுக்கு இடையில் அரையடி இடைவெளி இருக்க வேண்டும். மண்ணை ஈரப்படுத்தி பாரின் நடுவிலும் விதைக்கு விதை அரை அடி இடைவெளி இருக்குமாறு வெங்காயத்தை விதைக்க வேண்டும். விதைவெங்காயத்தின்வேர் பகுதி மண்ணுக்குள் இருக்க வேண்டும். 4-ம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரத்தன்மைக்கு எற்ப தண்ணீர் பாய்த்து வர வேண்டும்.
20நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில், 10கிலோ கடலைப்பிண்ணாக்கு கலந்து பாசன நீரில் விட வேண்டும். இதனால், வளர்ச்சி வேகம் அதிகரிப்பதோடு, வெங்காயம் திரட்சியாக இருக்கும் வாரம் ஒரு முறை 2லிட்டர் மீன் அமினோ அமிலம், 2லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை 100லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்கள் மேல் தெளிக்க வேண்டும்.
வெங்காயம் பேன் உள்ளிட்ட பூச்சித்தாக்குதல் தென்பட்டால் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் தெளிக்க வேண்டும். 75-ம் நாளுக்கு மேல் வெங்காயம் அறுவடைக்கு வரும் அறுவடை செய்த வெங்காயத்தை நிலத்திலேயே ஒரு வாரம் வெயிலில் காய வைக்க வேண்டும்.
ரசாயன முறையில் சாகுபடி செஞ்ச வெங்காயத்தை ரெண்டு மாசத்துக்குள்ள விற்பனை செஞ்சாகணும். இல்லாட்டி வெப்பம் அதிகமாகி அழுகிடும். ஆனால் இயற்கை விவசாயத்துல விளைவிச்ச சின்ன வெங்காயத்தை அஞ்சு மாசத்துக்கு மேல இருப்புவெக்க முடியும்.”
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க