சோழர் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை சிறுசுனை கிராமத்தில் கல்வெட்டு மூலம் கண்டுபிடிப்பு.
டிசம்பர் 13, 2017
0
புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் அருகே, சிறுசுனை கிராமத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுசுனை கிராமத்திலுள்ள சிதிலமடைந்த கோயிலில் கள ஆய்வு செய்ய வேண்டுமென எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்புமன்ற ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆய்வுக்கழக மரபுநடை ஒருங்கிணைப்பாளருமான கஸ்தூரிரங்கன் மற்றும் பள்ளியின் மன்ற மாணவர்கள் அயன்ராஜ் , ஐஸ்வர்யா, நிகல்யா அளித்த தகவலையடுத்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகதலைவர் கரு.ராசேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் மூலம் புதிய வரலாற்று செய்தி தெரிய வந்துள்ளது.
இக்கல்வெட்டின் மூலம் மூலம் சோழர்கால மன்னராட்சி நிர்வாகத்திலேயே வரி வசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி அந்தந்த கிராமங்களின் உள்ளூர்த் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்திருப்பது நமக்கு வியப்பளிக்கும் தகவலாக உள்ளது என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க