வரலாற்றில் இன்று ஜனவரி 10.

Unknown
0
ஜனவரி 10 கிரிகோரியன் ஆண்டின் 10 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
236 – பேபியன் 20வது திருத்தந்தையானார்.
1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் ஒட்டோமான் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தான்.
1645 – லண்டனில் முதலாம் சார்ல்ஸ் மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக ஆயர் வில்லியம் லாவுட் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
1840 – ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
1881 – யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1920 – முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1924 – பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
1946 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக வானொலி அலைகளை நிலாவில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
1954 – பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1972 – சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானில் 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான வங்காளதேசத்திற்குத் திரும்பினார்.
1974 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
1984 – 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
1985 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அரசுத்தலைவர் ஆனார்.
1989 – கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
1995 – உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.
2001 – விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
2005 – தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.

பிறப்புகள்

1869 – கிரிகோரி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு (இ. 1916)
1883 – டால்ஸ்டாய், ருஷ்ய எழுத்தாளர் (இ. 1945)
1938 – டொனால்ட் குனுத், அமெரிக்கக் கணினிவியலாளர்
1940 – கே. ஜே. யேசுதாஸ், இந்தியப் பாடகர்
1949 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (இ. 2002)
1974 – கிருத்திக் ரோஷன், இந்திய நடிகர்

இறப்புகள்

314 – மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)
1761 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
1778 – கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. 1707)
1904 – ஜீன் லியோன் ஜேர்மி, பிரெஞ்சு ஓவியர், சிற்பர் (பி. 1824)
2006 – ஆர். எஸ். மனோகர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
2008 – பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top