பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் அமோக விலைச்சல்.

Unknown
0
பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக, சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் பயிர் அமோகமாக, விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மஞ்சள் உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும் பெண்களுக்கான தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாகவும் உள்ளதால், மஞ்சள் எப்போதும் பண பயிர்களின் பட்டியலில் தான் உள்ளது.
மஞ்சள் 9 முதல் 10 மாத பயிரான மஞ்சள் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கட்டாயம் இருக்க வேண்டும். மஞ்சள் பயிருக்கு பேக்டம்பாஸ், பொட்டாஷ். யூரியா, உள்ளிட்ட உரங்களை போட்டு, பூச்சி தாக்காமல் மருந்து தெளித்தும், மின் தட்டுப்பாடு நேரத்திலும் தடைகள் இன்றி வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி, முறையாக, பராமறித்து, சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 20 மூட்டைக்கு மேல் அறுவடை செய்யலாம். இது மஞ்சள் விசாசயிக்கு கிடைக்கும் லாபமாகும்.
மஞ்சளிலும் பலவகை உண்டு. இதில், விரல் மஞ்சள், குண்டு மஞ்சள் என பலவகை உள்ளது. அதனை வகைப்படுத்தி விற்கப்படுகிறது. இதிலும், பொங்களுக்கு என தனி மஞ்சள் உள்ளன. இந்த மஞ்சள் 8 மாதத்தில் அறுவடை செய்து விற்க வேண்டும். பொங்கல் பண்டிகை என்றாலேயே, பொங்கல் பானையில் மஞ்சள் கொத்து கட்டுவது, வீடுகளில் தொங்க விடப்படும் தோரணங்களுக்கு நடுவே அலங்காரப் பொருளாக மஞ்சள் கட்டப்படுவது வழக்கம். இதனையட்டி, செடியோடு பிடுங்கி எடுத்து வந்து ஜோடி ரூ.25 முதல் 50 வரைக்கும் விற்கப்படுகிறது.
சில வியபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று, ஜோடி ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரைக்கும் விற்கின்றார்கள். இதனால், உற்பத்தி செய்பவர்களை விட வாங்கி விற்பவர்களுக்கு தான் அதிக லாபம் கிடைக்கிறது. இந்த ஆண்டு எனக்கு ரூ 50 ஆயிரம் வரை மஞ்சள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். தற்போது, மஞ்சள் பயிர் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது என கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top