இதையடுத்து அருகில் உள்ள சேகர் என்பவரது நோட்-புக் விற்கும் ஸ்டேஷனரி கடையிலும் பூட்டை உடைக்க முயற்சிநடந்துள்ளது.மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சேதுசாலையில் பழைய பேருந்துநிலையம் எதிரே உள்ள சாகுல் ஹமீதுஎன்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. தலையில் பனிகுல்லா, கையில் (க்ளவுஸ்) கையுறை அணிந்த மர்மநபர் பணத்தை திருடிச் செல்வது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்துகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேராவூரணி கடைவீதியில் அடுத்தடுத்து ஒரே இரவில் கடைகளில் நடந்துள்ள திருட்டுச் சம்பவம் வர்த்தகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. எனவே போதிய காவலர்களை நியமித்து கடைவீதியில் பாதுகாப்பை ஏற்படுத்தவும், குற்றவாளியை கைதுசெய்து திருட்டு போன பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
