விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கே. அடைக்கலம் தலைமை வகித்தார். கல்வியாளர்கள் வழக்குரைஞர் வி.ஏ.டி.சாமியப்பன், டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர், வீ.ராமநாதன், தலைமையாசிரியர் எம்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளர் கவிஞர் அ.உலகநாதன், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, "விதை ஒன்று விருட்சமாகிறது' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பொருளாளர் அ.மெய்ஞானமூர்த்தி வரவேற்றார். செயலாளர் எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்.
விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி