பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் எமதர்ம ராஜன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சிற்றம்பலத்தில் எமதர்ம ராஜனுக்கு தனிக்கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
இதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 19ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் மகா கும்பாபிஷேகம் காலை 10.05 மணிக்கு நடைபெற்றது. தீபாராதனையை தொர்ந்து அருள் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோயில் கும்பாபிஷேகம்.
ஜனவரி 23, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க