ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிளாடிஸ் தலைமைவகித்தார். பேராசிரியர் ராணி வரவேற்றார். தேர்தல் பிரிவுதுணை வட்டாட்சியர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ஜமுனா தொகுத்து வழங்கினார். நிறைவாக கல்லூரிநாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பழனிவேலு நன்றி கூறினார்.தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கோலப் போட்டி, பேச்சுப் போட்டி, சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்.
ஜனவரி 26, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க