பேராவூரணி சேதுசாலையில், வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ( வடகிழக்கு) பெற்றோர் - ஆசிரியர் கழக கலந்தாலோசனைக் கூட்டம்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சித்ராதேவி வரவேற்றார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் நீலவேணி, பள்ளி மேலாண்மை குழு தொண்டு நிறுவன பிரதிநிதி எஸ்.ஜகுபர்அலி, பள்ளி ஆசிரியர்கள் நீலவேணி, ஹாஜா முகைதீன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஆத்தாளூர் வீரகாளிய ம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் பள்ளியில் உள்ள பழைய சிமெண்ட் ஆஸ்பெஷ்டாஸ் கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இதை இடித்து அகற்றி விட்டு, புதிய சிமெண்ட் கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேராவூரணி அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக் கோரிக்கை.
ஜனவரி 09, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க