தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர்.இருந்த போது, காவிரி ஆறு பாயும் டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான கிளை வா ய்க்கால்களின் கரைகளில், உலக வங்கியின் நிதி உதவியுடன் தேக்கு மரக்கன்றுகளை வளர்க்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி வளர்க்கப்பட்ட தேக்கு மரங்கள், இன்று தமிழக அரசின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்தாக உள்ளது. அவ்வாறு வளர்ந்துள்ள மரங்கள் பல இடங்களில் மழை, காற்றால் ஆங்காங்கே சாய்ந்து விழுந்து கிடக்கிறது.
திருச்சிற்றம்பலம் அருகே செல்லும் காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களான புதுப்ப ட்டினம்- 1 மற்றும் புதுப்பட்டி னம்- 2 ஆம் நம்பர் வாய்க்கால்களின் இரண்டு கரைகளிலும் உள்ள தேக்கு மரங்கள் விழுந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதேபோல் துறவிக்காடு, ஒட்டங்காடு பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் கிளை வாய்க்காலின் ஓரத்திலும், குறுக்கிலுமாக விழுந்து கிடக்கிறது. அதனை அதிகாரிகள் இன்று வரை அப்புறப்படுத்தாமல் இருப்பதால்,அவை மண்ணில் கிடந்து, மக்கி வீணாகிக் கொண்டிருக்கிறது.
காவிரி படுகையில் தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்தாக உள்ள தேக்குமரங்களை இனிமேலும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு, அரசுக்கு வருவாய் இழப்பை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள், தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
