பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகத்தினை நவீனப்படுத்தி மறுகட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார் .
மல்லிப்பட்டினத்தில் கடலோர பேரழிவு இன்னல் நீக்கும் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தி மறு கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணியில் மீன்வளத்துறை அலுவலகம் வலை உலர்களம், மீன் விற்பனை மையம், கழிவறைகள், கூடுதலாக படகு இறங்குதளமும் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சுற்றுலாத் தலமான மனோரா பகுதியில் ஆய்வு செய்து மின் விளக்குகள் எல்.இ.டி. பல்புகளை மாற்றிடவும், 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திடவும் உள்ளாட்சித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டாட்சியர் ரகுராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு.
பிப்ரவரி 24, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க