துலுக்கவிடுதி, ஆவணம் பகுதிகளில் அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு பேராவூரணி பயணியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு நேரில் சந்தித்து, வரவிருக்கும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், பூக்கொல்லைமற்றும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள காட்டாற்றில் உள்ள பாலத்தை உயர்மட்டப் பாலமாக அமைக்கும் பணியைதுரிதப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.வாடகைக்கார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஏற்கெனவே இருந்தபடி கார்நிறுத்துமிடம் அமைக்க அனுமதி கோரி மனு அளித்தனர். ஆசிரியர் மற்றும் அனைத்துத்துறை அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், வீர.சந்திரசேகர், சரவணன், ராகவன்துரை, செல்லதுரை மற்றும் தமிழ் ஆர்வலர் தங்கவேலனார் ஆகியோர் தலைவர் புலவர் சு.போசு தலைமையில் சந்தித்து பேராவூரணியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு அளித்தனர்.


