பட்டுக்கோட்டையில் அருள் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்.

Unknown
0
பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீதேவி புமிதேவி ஸமேத ஸ்ரீ ரங்கநாதபெருமாள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மாஹாஸம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் இன்று காலை மிக சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்குழுவினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்கள் எடுத்து பூலோகத்தை வைகுண்டமாக்கி தினமும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை ரட்சித்து, வேண்டியவரங்களை தந்து காத்துவருகிறார் என முழுமையாக நம்பும் பக்தர்கள். அந்த வகையில் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீதேவி புமிதேவி ஸமேதரமாய் ஸ்ரீரங்கபெருமாள் அருள்பாலிக்கும் திருக்கோயிலை பெரும் பொருட்செலவில் புணரமைத்து இன்று 101 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்து இந்த பகுதி பக்தகோடிகளின் விருப்பத்ததை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த திருக்கோயிலில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் மாமதில் கொண்ட மூன்றாவது பிரகாரம் எனத்திருப்பதியில் கருவறை அமைந்து இருப்பது போல ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்த்ர முறைப்படி இத்திருத்தளத்தினை ஆகமவிதிப்படி அமைத்து யாக வழிபாடுகள் செய்து இன்று கும்பாபிஷேகத்தை நடத்திமுடித்துள்ளனர்.

இந்திருக்கோயில் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது . மேலும் இந்த திருக்கோவில் சுமார் 101 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருக்கோயிலின் ராஜகோபுரம் தவிர்த்து அனைத்து கோபுரங்களையும் புதுப்பித்து இன்று (4.2.18), சதுர்த்தி திதியும், உத்திரம் நட்சத்திரமும், அம்ருதயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் கும்ப லக்ணத்தில் திருப்பணியினை ஸ்ரீலஸ்ரீ சிவராஜ மஹேந்திர சுவாமிகள் முன்னிலையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகத்தினை செய்தனர்.

இன்று திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்த கோடிகளுக்கு திருப்பணிக்குழு சார்பில் ஆண்மீக அன்பர்களின் பொருள் மற்றும் நிதியுதவியுடன் 11 ஆயிரம் பேருக்கு அன்னாதனமும் வழங்கப்பட்டது. இன்று காலை முதல் ஆண்மீக நண்பர்களும், பக்தபெருமக்களும், பெருமாள்கோவில் தெருவாசிகள், பட்டுக்கோட்டை நகரவாசிகள் மற்றும் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பக்தகோடிகளும் , பொதுமக்களும் பெரும் திரளாக வந்து மஹா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டடு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் அருளைபெற்று சென்றனர். இந்த கும்பாபிஷேகத்தினை சீறும் சிறப்புமாக நடத்திமுடித்த திருக்கோயிலின் திருப்பணிக்குழு மற்றும் கும்பிஷேக குழுவினர்களுக்கு பக்தர்கள் வாழ்த்துக்களையும் நன்றியினையும் கூறி சென்றனர்.

மேலும் அடித்தளத்துடன் நிற்கும் ராஜகோபுர பணியினை தொடர்ந்து நடத்திட 108 நபர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களிடம் நிதி பெற்று ராஜகோபுரம் அமைக்கும் அடுத்தக்கட்ட பணியினையும் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top