பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மேசை, நாற்காலி வழங்கல்.
பிப்ரவரி 06, 2018
0
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டதளவாடப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வழங்கினார்.பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்கிளாடிஸ் தலைமை வகித்தார். கல்லூரி கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராணி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்து 47 ஆயிரத்து 750 மதிப்பிலானடேபிள், சேர், பீரோ உள்ளிட்ட 95 பொருட்களை வழங்கிப்பேசினார்.நிகழ்ச்சியில் மாநில கயறு வாரியத் தலைவர் நீலகண்டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் நாடியம் சிவ.மதிவாணன், பெற்றோர் ஆசிரியர் சங்கநிர்வாகிகள் எம்.சுந்தர்ராஜன், ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், ஒப்பந்ததாரர் இரா.சங்கர், பொறியாளர் மா.கோ.இளங்கோ, கணேசன், பேராசிரியர் ராஜ்மோகன், பழனிவேலு, முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க