இதனால் ஏர்செல் நிறுவன சிம்கார்டு பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி, வேலைக்குச் சென்ற குடும்பஉறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் பலரும் தவித்தனர்.இணையவழியைப் பயன்படுத்தி பல்வேறு பணிகளைச் செய்வோர் சிரமத்திற்குள்ளாகினர். வாடிக்கையாளர் சேவை மையத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மொபைல் போன் சிம்கார்டு, ரீசார்ஜ் செய்யும் கடைகளில் வியாபாரம் பாதித்தது.
செல்போன் டவர் வாடகை மற்றும் மின்கட்டணத்தைச் செலுத்தாததால், மின்வாரியஅதிகாரிகள் டவருக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாக செல்போன் டவர் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து பேராவூரணியைச் சேர்ந்த ஆத.சுப.மணிகண்டன் கூறுகையில், “ ஏர்செல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றிசேவையை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிராய் ஆணையம் உடனடியாக ஏர்செல் நிறுவனத்தின் சேவைக்குறைபாடு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
