பேராவூரணியில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்.
பிப்ரவரி 04, 2018
0
பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ஸ்பர்ஷ் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம், பேராவூரணி சேதுரோடு, நரிக்குறவர் காலனி, அண்ணாநகர், கருப்பமனை, ஆதனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. அவர் பழங்குடி இனத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மக்களை பரிசோதித்து பின்னர் அவர்களிடம் பேசுகையில், " உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயின் அறிகுறியாகும். ஆரம்ப நிலை சிகிச்சை உடல் ஊனத்தை தடுக்கும். தொழுநோய்க்கான கூட்டுமருந்து சிகிச்சை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
முகாமில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் எஸ்.கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் பிரதாப்சிங் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க