பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற் குட்பட்ட, மணக்காடு ஊராட்சியை சேர்ந்த பாங்கிராங்கொல்லையில் நெல்லியடிக்காடு- ஆதனூர் செல்லும்சாலையில், காளியம்மன் கோயில் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது.சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, எலும்புக்கூடாக காட்சியளிக்கும் இந்த மின்கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில், எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அருகிலேயே குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக சேதமடைந்துள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றித்தர வேண்டும் என்று மின்வாரிய அலுவலர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை.
மார்ச் 12, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க