ஊரணிக்கரை பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அவதி: மறியலில் ஈடுபட முடிவு.

Unknown
0
மாவடுகுறிச்சி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஊரணிக்கரை குடியிருப்பில் கடும் குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. உடனடியாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் மாவடுகுறிச்சி ஊராட்சிக்குட்பட்டது ஊரணிக்கரை குடியிருப்பு. இது பேராவூ ரணி - பட்டுக்கோட்டை மெயின் சாலையில், கொன்றைக்காடு ஆற்றுப்பாலம் அருகில் உள்ளது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்ப ட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த 15 தினங்களாக ஆழ்குழாய் கிணறு மோட்டார் பழுதடைந்து ள்ளதால், இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்ப ப்படவில்லை. இதனால் குடிதண்ணீர் இன்றி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெண்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து, பக்கத்து ஊர்களுக்குச் சென்று தண்ணீர் பிடித்து வருவதும் குடிதண்ணீரை ரூ.40, ரூ.50 என விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பல முறை நேரில் சென்று முறையிட்டும், மனு அளித்தும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. உடனடி யாக புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து, தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஒரு வாரத்தில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, அனைத்துக் கட்சியினருடன் இணைந்து பேராவூரணி - பட்டுக்கோட்டை மெயின் சாலையில் கொன்றைக்காடு ஆற்று ப்பாலம் பகுதியில் சாலை மறியல் போரா ட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.



நன்றி: தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top