பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பையில் மாநில கைப்பந்துப் போட்டி.

Unknown
0
பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பையில் விஸ்டம் கைப்பந்து கழகம் மற்றும் கிராமத்தார்கள் சார்பில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி கடந்த மார்ச்-9 வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிறு வரை நடைபெற்றது.

முதல் நாள் போட்டியை, சென்னை மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் முன்னிலையில், தஞ்சாவூர் பீச் கைப்பந்து கழக கௌரவ தலைவர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். நிறைவு நாள் போட்டியை முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சரும், தஞ்சாவூர் கைப்பந்து கழகச் செயலாளருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தொடங்கி வைத்து பரிசு வழங்கினார்.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.40 ஆயிரத்தை சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி, இரண்டாம் பரிசு ரூ. 30 ஆயிரத்தை சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரத்தை குருவிக்கரம்பை விஸ்டம், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரத்தை சென்னை புனித ஜோசப் பொறியியல் கல்லூரி, ஐந்தாம் பரிசு ரூ.15 ஆயிரத்தை சென்னை சத்யபாமா பல்கலைக்கழக அணியினரும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரத்தை ஈரோடு பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி, இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரத்தை சென்னை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் எக்சலென்ஸ், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரத்தை சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, நான்காம் பரிசு ரூ.10 ஆயிரத்தை குருவிக்கரம்பை விஸ்டம், ஐந்தாம் பரிசு ரூ.7 ஆயிரத்து 500-ஐ சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி அணியினரும் பெற்றனர்.

இப்போட்டிகளில் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் என்.அசோக்குமார், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர், வழக்கறிஞர் வி.ஏ.டி.சாமியப்பன், தஞ்சை மாவட்ட கைப்பந்து கழக இணைச்செயலாளர் கோபால், முன்னாள் தமிழக அணி வீரர் ஏ.பழனியப்பன், மாநில நடுவர் பாரதிதாசன், கே.கே.டி.சுப்பிரமணியன், கு.சின்னப்பா, கே.ஸ்ருதி, வி.கோவிந்தசாமி, ஏ.சந்தர் வைரவன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.








Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top