பேராவூரணி அருகே பூக்கொல்லை - ரெட்டவயல் பூனைகுத்தியாறு காட்டாறில் இறைச்சிஉள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பூக்கொல்லை-ரெட்டவயல் பூனை குத்தியாறு காட்டாறு, இப்பகுதி மக்களின் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக பூக் கொல்லை பகுதியில் கோழி இறைச்சிகழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை காட்டாற்றில் மர்மநபர்கள் கொட்டுகின்றனர். இவை மலை போல்குவிந்துள்ளன. இதனால் காட்டாறு மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயமும் ஏற்பட் டுள்ளது. எனவே இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி அடுத்த பூக்கொல்லை காட்டாறு கழிவுகளால் நிரம்புகிறது.
ஏப்ரல் 12, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க