தேங்காய் விலையை உயர்த்த புனல்வாசல் நுகர்வோர் குழு வலியுறுத்தல்.

Peravurani Town
0
தேங்காய் விலையை உயர்த்த வேண்டும் என புனல்வாசல் நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து,  அந்த அமைப்பின் தலைவர் வி.ஏ.சவரிமுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒரு தேங்காயின் உற்பத்தி செலவு, தேங்காய் பறிக்க, ஒருங்கிணைக்க,  உறிக்க வேலையாட்கள் கூலி என ரூ.15 ஆகிறது. வெளிச்சந்தை விலையாக வியாபாரிகள் தர வாரியாக சிறிய தேங்காய் ரூ. 10-க்கும், பெரிய தேங்காய் ரூ.15-க்கும் பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதால் தென்னை விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
மற்ற பொருள்களின் விலையை ஒப்பிடுகையில், குறிப்பாக 1ஆப்பிள்  ரூ.30-க்கு விற்கப்படுகிறது. ஆனால் 1 உறித்த தேங்காய்
ரகத்துக்கு ஏற்றபடி ரூ.10-ல் இருந்து ரூ.15 வரை மட்டுமே விற்கப்படுவது தென்னை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பேரிழப்பாகும்.
ஆந்திரா, கேரளா மாநில அரசுகள் தங்கள் மாநில தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில் தேங்காய் வணிக மையம் ஏற்படுத்தி, உறித்த தேங்காய்  ஒன்றின் விலை ரூ. 30 எனவும், அதற்கேற்ப கொப்பரை விலையை கிலோ ரூ. 250 எனவும் நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்து, தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு செயல்படுவதை கவனத்தில் கொண்டு, தமிழக அரசும் உறித்த தேங்காய் ஒன்றின் விலையை ரூ. 30 என நிர்ணயம் செய்து, அதற்கேற்ப கொப்பரை விலையை கிலோ ரூ. 250 என நிர்ணயம் செய்வதுடன், அவற்றை தமிழக அரசே கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top