தஞ்சாவூர் மாவட்ட கபடி அணிக்கு ஜூலை 29-இல் வீரர்கள் தேர்வு.

Peravurani Town
0
மாநில ஜூனியர் கபடி போட்டிக்கு தஞ்சாவூர் மாவட்ட அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு ஜூலை 29-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்டத் தலைவர் டி. கிருஷ்ணசாமி வாண்டையார் தெரிவித்திருப்பது:
திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 45-வது ஜூனியர் மாநில சாம்பியன் கோப்பை கபடி போட்டி  ஆக. 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், கலந்து கொள்வதற்கான தஞ்சாவூர் மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு தஞ்சாவூர் மேம்பாலம் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூலை 29-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
வீரர்கள் எடை 70 கிலோவுக்குள்ளும், வீராங்கனைகளின் எடை 65 கிலோவுக்குள்ளும், 15.9.1998-க்கு பிறகு பிறந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9443588801, 9443974702, 9585885796 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி:தினமணி
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top