பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகளாக பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி விரைவில் நூற்றாண்டு கொண்டாட உள்ள மிகப் பழமையான பள்ளியாகும். இப்பகுதியில் ஐந்து தலைமுறை மாணவர்களைக் கொண்ட பள்ளிக்கூடமாகும்.
இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக கலைமதி என்ற மாணவியின் தந்தை த.பழனிவேலு தலைவராகவும், யாழினி என்ற மாணவியின் தாய் மங்கையர்க்கரசி துணைத்தலைவராகவும், பெரியார் பிரபாகரன் என்ற மாணவனின் தந்தை சித.திருவேங்கடம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையன் தலைமை வகித்தார், கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், மக்கள் பிரதிநிதி டாக்டர் மு.சீனிவாசன், தொண்டு நிறுவன பொறுப்பாளர் லோகேஸ்வரன் முன்னிலையில் தலைமை ஆசிரியர் மாலதி வரவேற்றார், ஆசிரியர் சுபாஸ் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு, பள்ளிக்கு முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்துதல், பழுதடைந்த கட்டிடத்தை அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.