நாவல் பழம்.

Unknown
0
நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பயிரிடுவது குறைவாக உள்ளது. ஏனெனில் சாகுபடி முறைகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாதது, குட்டையான மற்றும் அதிக மகசூல் வகைகள் கிடைக்கப்பெறாதது ஆகியவையாகும்.
நாவல்பழம் உள்நாட்டில் வர்த்தக மதிப்பு மிக்க பழமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி மற்றும் ராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் உயரமாக மற்றும் அழகாக தோற்றமளிக்கும். இம்மரத்தை சாலை ஒரங்களில் நிழலிற்காகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது.
இதன் தாயகம் இந்தியா அல்லது கிழக்கிந்திய தீவுகள் ஆகும். இது தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர் மற்றும் சில நாடுகளிலும் காணப்படுகிறது. இது புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்பமண்டல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இமயமலையில் 1300 மீட்டர் வரை மற்றும் குமோன் மலைகளில் 1600 மீட்டர் உயரத்திலும் காணப்படுகின்றது. இது பரவலாக கங்கை சமவெளியிலிருந்து தென் தமிழ்நாடு வரை வளர்க்கப்படுகிறது.
மண்
நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும்  தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது.
காலநிலை
நாவல் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காலநிலையில் நன்கு வளரும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் வறண்ட வானிலை தேவைப்படுகிறது. மித வெப்ப மண்டல பகுதிகளில், மழைப் பொழிவு பழம் பழுக்கும் தருணத்தில் இருப்பதால்  பழங்களின் எடை, நிறம் மற்றும் சுவை அதிகரிக்கும்.
வகைகள்
பொதுவாக வட இந்தியாவில் வளர்க்கப்படும் வகை “ராம் நாவல்” ஆகும். பழங்கள் பெரியதாகவும், நீள்சதுர வடிவாகவும், முழுமையாக பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீல கருப்பு நிறத்திலும் இருக்கும். நன்கு பழுத்த பழத்தின் கூழ் ஊதா நிறத்தில் இருக்கும். பழம் அதிக சாறுடையதாகவும் இனிப்பாகவும் இருக்கும். கொட்டை அளவு சிறியதாக இருக்கும். இந்த வகைகள் ஜூன், ஜூலை மாதங்களில் பழுக்கும். இவை கிராமப்புற மற்றும் நகர்புற சந்தைகளில் அதிகமாக காணப்படும்.

மற்றொரு வகையானது, பழங்கள் சிறிய அளவாகவும், சற்று உருண்டையாகவும் இருக்கும். பழுத்த பழங்கள் அடர் ஊதா நிறம் அல்லது கருமையாகக் காணப்படும். சதை ஊதா நிறமாக இருக்கும். இது குறைவான சாறுடையது, எடை மற்றும் சதையின் இனிப்புத் தன்மை ராம் நாவலைவிடக் குறைவு ஆனால் கொட்டை அளவு பெரியதாக இருக்கும். பொதுவாக இவ்வகைப் பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கும்.
தற்பொழுது, பல வகைகள் இந்தியாவில் உள்ளதால் நல்ல இரகங்களைத் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

இனப்பெருக்கம்
விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பல கருவாக்கம் இருப்பதால், இது மூல விதை மூலம் உருவாகிறது. தாவர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் இந்த முறை காய் பிடிக்க தாமதமாகும் என்பதால் அறிவுறுத்தப்படுவதில்லை. எனவே விதை இனப்பெருக்கமே பரிந்துரைக்கப்படுகிறது.
புதிய விதைகளை விதைக்க வேண்டும். முளைக்க சுமார் 10 முதல் 15 நாட்களாகும். நாற்றுகளை வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மார்ச்) அல்லது மழை காலத்தில் அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடலாம்.
நாவல் இனப்பெருக்கம் செய்வது எளிதானது. 10 - 14 மி.மீ தடிமனாக இருக்கும்  ஒரு வயதான நாற்றுகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய வேண்டும். குறைவான மழை உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய சிறந்த மாதம் ஜூலை முதல் ஆகஸ்ட் ஆகும். மழை அதிகமாக உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் மே - ஜூன் மாதங்களில் செய்யலாம்.
வளைப்பதியம் கட்டுதல் மூலமும் நாவலை இனப்பெருக்கம் செய்யலாம், ஆனால் இது வணிக ரீதியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த முறையில் தாய் மரத்திலிருந்து எடுத்த மரக் குச்சியை ஒரு தொட்டியில் வைத்து ஜ%ன் மற்றும் ஜ%லை மாதங்களில் வளைப்பதியம் கட்டப்பட்டு ஒரு வருட நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன. நல்ல வேர் பிடிப்பிற்கு இடைப்பட்ட மூடு பனியில் பதியம் பெறப்படுகிறது.
நடவு

நாவல் ஒரு இலை உதிரா மரம். இவை வசந்தகாலம் (பிப்ரவரி - மார்ச்) மற்றும் மழைக்காலம் (ஜ%லை - ஆகஸ்ட்) ஆகிய இரண்டு பருவங்களிலும் நடவு செய்யலாம். பிந்தையப் பருவத்தில் நடவு செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்தால் மே மற்றும் ஜ%ன் மாத வறட்சியை தாங்கி வளருவது கடினமாக இருக்கும்.
நடுவதற்கு முன் விளைநிலத்தை சுத்தப்படுத்தி உழ வேண்டும். 1 x 1 x 1 மீ குழிகளை 10 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பொதுவாக, பருவமழைக்கு முன்பே குழிகள் தோண்டுவதை நிறைவு செய்ய வேண்டும். குழியில் 75% மேல் மணல் மற்றும் 25 % தொழுவுரம் அல்லது மட்கிய உரம் ஆகியவற்றை கலந்து நிரப்ப வேண்டும். பொதுவாக நாவல் மரம் நிழலுக்காக பண்ணை மற்றும் கிணற்றடிகளில் வளர்க்கப்படுகிறது. இங்கே இவை பழங்களைத் தவிர நிழலையும் வழங்குகின்றன.
உரமிடுதல்
நாவலுக்கு பொதுவாக உரமிடுவதில்லை. ஆண்டுக்கு 19 கிலோ தொழுஉரம் இட வேண்டும். மரம் நன்கு வளரும் நிலையில் மரம் ஒன்றுக்கு 75 கிலோ அளிக்க வேண்டும்.
பொதுவாக, நாற்று மூலம் நட்ட செடி காய் பிடிக்க 8 முதல் 10 வருடமாகும். ஒட்டுக்கட்டுதல் மூலம் நட்ட செடி காய் பிடிக்க 6 முதல் 7 வருடமாகும். மண்ணில் அதிக ஊட்டசத்து இருந்தால் இலைகள் அதிகமாக வரும், ஆதனால் காய் பிடிப்பதற்கு தாமதமாகும். இந்த மரங்களுக்கு உரம் மற்றும் பாசன அளவு மிகக் குறைவாக வழங்கப்பட வேண்டும். செப்டம்பர் - அக்டோபர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நிறுத்திவிட வேண்டும். இந்த முறை நாவலில் மொட்டு அரும்புவதற்கும், காய் பிடிப்பதற்கும் உதவுகிறது. சில சமயங்களில் இவையும் பயனுள்ளதாக இருக்காது. அந்த சமயம் வேரை கவாத்து செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் வளர்ச்சி மற்றும் காய் பிடிக்கும் அளவைக் கொண்டு உரத்தை அளிக்க வேண்டும்.
நீர்ப்பாசனம்
ஆரம்ப காலத்தில், தொடர்ச்சியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பின்னர் பாசன இடைவெளியை குறைக்க வேண்டும். இளம் மரங்களுக்கு ஒரு ஆண்டில் 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் தேவைப்படும். வளர்ச்சி அடைந்த மரங்களுக்கு மே - ஜூன்  மாதங்களில் 4 முதல் 5 முறை நீர்ப்பாசனம் போதுமானது. இலையுதிர் மற்றும் குளிர் மாதங்களில் மண் உலர்ந்த போது மட்டும் பாசனம் செய்தல் போதுமானது. இது குளிர் காலங்களில் பனியின் மோசமான விளைவுகளில் இருந்த மரத்தைக் காக்கும்.
ஊடுபயிர்
நடவு செய்த ஆரம்ப ஆண்டுகளில், தோட்டத்தில் அதிக இடைவெளி காணப்படும் பொழுது அதற்கான ஊடுபயிராக பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களை மழைக்காலங்களில் பயிரிடலாம்.
கவாத்து செய்தல்
நாவலுக்கு வழக்கமான கவாத்து செய்தல் தேவையில்லை. உலர்ந்த மற்றும் குறுக்குக் கிளைகளை நீக்கப்பட வேண்டும். தாவரத்தின் கிளைகளை தரைமட்டத்திலிருந்து 60 முதல் 100 செ.மீல் வளர விட வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top