பேராவூரணி அருகே சாணாகரை கிராமத்தில் முறிந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணியில் இருந்து கீரமங்கலம் செல்லும் சித்தாதிக்காடு- சாணாகரை சாலையில் சிறிய ஆற்றின் கரையில் பழைய மின்கம்பம் பழுதாகி மேற்பகுதி முறிந்த நிலையில் ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.பள்ளி, கல்லூரி செல்லும் பேருந்துகள் இவ்வழியே சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அச்சத்துடனே இப்பகுதியை கடந்து செல்ல வேண்டிஉள்ளது. தற்போது ஆடிக் காற்று பலமாக வீசுவதால் எந்நேரத்திலும் விழுந்துவிட வாய்ப்புள்ளது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம் பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தீக்கதிர்