பேராவூரணி ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் பேராவூரணி காமராசர் அரசு மருத்துவமனை வளாகத்தில், 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வழங்குதல், காதொலிக் கருவி, மூன்று சக்கர வாகனம், காலிபர்கள், தேவைக்கேற்ப அறுவை சிகிச்சைகள் போன்ற நலத்திட்டங்கள் வழங்கும் நோக்கத்தில் இந்த முகாம் நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான பயனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனபெற்றனர்.
இந்நிகழ்வு பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமையிலும், வட்டாரக் கல்வி அலுவலர் அங்கையற்கன்னி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பரமசிவம், தலைமை மருத்துவ அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், புரவலர்கள் ஆதனூர் மோகன், பாலசுப்பிரமணியன், செய்தியாளர்கள் வேத.குஞ்சருளன், ராஜா, பழனியப்பன், திருஞானம் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டுக்கோட்டை, செருவாவிடுதி மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நன்றி: மெய்ச்சுடர்